சிறந்த சுகாதாரம்.. தமிழ்நாடு, கேரளா பெஸ்ட்.. உ.பி., லாஸ்ட் !!
சிறந்த சுகாதாரம்.. தமிழ்நாடு, கேரளா பெஸ்ட்.. உ.பி., லாஸ்ட் !!

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சுகாதார செயல்திறனுக்கான தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு 2ஆம் இடம் பிடித்துள்ளது.
சுகாதார செயல் திறனுக்கான தரவரிசைப் பட்டியலை நிதி ஆயோக் அமைப்பு இன்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் தமிழகம் 2ஆம் இடம் பிடித்துள்ளது. முதல் இடத்தை கேரள மாநிலம் பிடித்துள்ளது.
2019-20 ஆண்டு கால கட்டத்தை கணக்கில் கொண்டு இந்த தரவரிசைப்பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தப்பட்டியலில் தெலுங்கானா மாநிலம் 3 ஆம் இடத்தில் உள்ளது. பட்டியலில் கடைசி இடத்தில் உத்தரபிரதேசம் உள்ளது. அண்மையில் உத்தரபிரதேசத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, உ.பி பெரும் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் உ.பி. வளர்ச்சி அடைந்தால் தான் இந்தியா வளர்ச்சி அடையும் எனவும் கூறியிருந்தார்.

இதனை குறிப்பிட்டு சுகாதார செயல் திறன் பட்டியலில் உ.பி. கடைசி இடத்தில் உள்ளதையும் சுட்டிக்காட்டி பலரும் விமர்சித்து வருகின்றனர். சிறிய மாநிலங்களில், ஒட்டுமொத்த செயல்திறனிலும், அதிகரிக்கும் செயல்திறனிலும் மிசோரம் சிறந்த மாநிலமாக தேர்வாகியுள்ளது. அதே சமயம் யூனியன் பிரதேசங்களில், டெல்லி மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகியவை ஒட்டுமொத்த செயல்திறனின் அடிப்படையில் கடைசி இடங்களில் உள்ளன.
newstm.in

