Theme Check

நோ பார்க்கிங்கில் வாகனம் நிறுத்தும் பழக்கம் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை..!

தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படும் குற்றத்திற்காக வசூலிக்கப்பட்டு வந்த அபராதத் தொகை, தற்போது இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. நோ பார்க்கிங்கில் இருசக்கர வாகனங்களை நிறுத்தப்பட்டிருந்தால் அதற்கு ரூ. 160 அபராதமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த தொகை ரூ. 225-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நோ பார்க்கிங்கில் வாகனம் நிறுத்தும் பழக்கம் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை..!
X

தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படும் குற்றத்திற்காக வசூலிக்கப்பட்டு வந்த அபராதத் தொகை, தற்போது இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலுக்கு வாகனங்களின் பெருக்கம் ஒரு முக்கிய காரணம் என்றாலும், சாலையோரங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்கள் பார்க் செய்யப்படுவதும் மற்றொரு காரணமாக உள்ளது.

இதை தடுக்கும் நோக்கில் மாவட்டந்தோறும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று தான் இழுவை வாகனங்கள். நோ பார்க்கிங் பகுதிகளில் யாரேனும் வாகனங்களை பார்க் செய்திருந்தால், டூ-வீலர் என்றால் அதை தங்களுடைய இழுவை வாகனங்களில் ஏற்றி கொண்டு சென்று விடுவார்கள். சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற மாநிலத்தில் முக்கிய நகரங்களில் இந்த நடவடிக்கை தீவிரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

நோ பார்க்கிங்கில் வாகனம் நிறுத்தும் பழக்கம் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை..!

தற்போது இந்த நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதன்படி, நோ பார்க்கிங்கில் இருசக்கர வாகனங்களை நிறுத்தப்பட்டிருந்தால் அதற்கு ரூ. 160 அபராதமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த தொகை ரூ. 225-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல தடை செய்யப்பட்ட இடங்களில் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் அதற்கு ரூ. 325 அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த தொகை ரூ. 450-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இழுவை வாகனங்களில் பணியாற்றுவதற்கு உதவியாளர்கள் கிடைப்பது பெரும் சிரமமாக உள்ளது. விதிமீறல் குற்றங்களுக்காக அபராதத் தொகையை உயர்த்துவதன் மூலம் வேலைக்கு ஆட்கள் அதிகமானோர் வரக்கூடும். அவர்கள் கேட்கும் ஊதியமும் வழங்கக்கூடும். அந்த காரணங்களால் அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

நோ பார்க்கிங்கில் வாகனம் நிறுத்தும் பழக்கம் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை..!

தமிழகத்திலேயே அங்கீகரிக்கப்படாத பகுதிகளில் வாகனங்கள் பார்க்கிங் செய்யும் குற்றங்கள் சென்னையில் தான் அதிகம் நடக்கின்றன. ஒவ்வொரு மாதம் தடை செய்யப்பட்ட இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகின்றன.

ஆண்டுதோறும் சென்னையில் மட்டும் அங்கீகரிக்கப்படாத இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம். இதனால் ஏற்பட்ட விபத்துக்கள் 1700-ஆக உள்லது. அதில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் எண்ணிக்கை 320 ஆகும்.

newstm.in

Tags:
Next Story
Share it