உஷார்!! ஹைவேஸ் டோல்கேட்ல இதெல்லாம் இருந்தா தான் கட்டணம் வசூலிக்கணுமாம்?!
ஃபாஸ்ட்டேக் நடைமுறைய பயன்பாட்டுக்கு வந்தும் சுங்கச்சாவடிகளில் கட்டணக் கொள்ளைகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் சுங்கச்சாவடிகளில் செய்யப்பட வேண்டிய போதிய வசதிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

ஃபாஸ்ட்டேக் நடைமுறைய பயன்பாட்டுக்கு வந்தும் சுங்கச்சாவடிகளில் கட்டணக் கொள்ளைகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் சுங்கச்சாவடிகளில் செய்யப்பட வேண்டிய போதிய வசதிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் வாகனங்கள் காத்திருப்பதை தடுக்கவும், கட்டண முறையை எளிமைப்படுத்தவும் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் ஃபாஸ்ட்டேக். வாகனத்தின் விண்டுஷீல்டுகளில் ஒட்டப்படும் எலெக்ட்ரானிக் சிப் மூலம் சுங்க கட்டணத்தை எளிதாக செலுத்திவிடலாம்.

இந்த நடைமுறை பயன்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையிலும், சுங்கச்சாவடிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுப்பப்படுகின்றன. கட்டணம் செலுத்துவதற்கான வழிகள் எளிமைப்படுத்தப்பட்டாலும், பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் போதுமான வசதிகள் தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
*அதன்படி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி சுங்கச்சாவடிகளில் செய்து தரப்பட வேண்டிய போதுமான வசதிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
*வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் தாகம் தீர்க்கும் வகையில் ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் குடிநீர் வசதி இருக்க வேண்டும்.
*சுங்கச்சாவடிகள் சட்டத்தின் படி பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தனித்தனியே கழிவறை வசதி செய்து தரப்பட வேண்டும்.
*முதலுதவி அளிப்பதற்கு தேவையான மருந்துப் பொருட்களுடன் கூடிய முதலுதவிப் பெட்டி இருக்க வேண்டும். அதேபோல, ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் அவசர ஊர்தி வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
*இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்களுக்கான தனிப்பட்ட வழி, வாகனங்களுக்காக வசூலிக்கப்பட சுங்கக் கட்டணம் கொண்ட அறிவிப்பு பலகை, சுங்கச்சாவடி அமைந்திருக்கும் இடத்தின் பெயர், வாகன ஓட்டிகள் ஓய்வெடுப்பதற்காக அறைகள் போன்ற வசதிகள் ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் இருக்க வேண்டும் என சுங்கச்சாவடி சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.
newstm.in

