Theme Check

உஷார்!! கழிவறை தண்ணீரில் சுட சுட தேநீர்! எழும்பூர் ரயில் நிலையத்தில் அலட்சியம்!!

இது சுத்தமான டீயா..? ரயிலில் கழிவறைக்கு பயன்படுத்தும் நீரை டீ கேனில் கலந்த டீக்கடைக்காரர்.!

உஷார்!! கழிவறை தண்ணீரில் சுட சுட தேநீர்! எழும்பூர் ரயில் நிலையத்தில் அலட்சியம்!!
X

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 7வது நடைமேடையில் சிற்றுண்டி கடை உள்ளது. இக்கடையில் பணியாற்றும் ஊழியர் ஓருவர் ரயில்வே கழிவறைக்கு பயன்படுத்தும் தண்ணீரை, தேநீர் குடுவையில் நிரப்பும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானது. இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. பயணிகளுக்கு சுகாதாரமான தேநீர் வழங்கப்படுகிறதா என கேள்வி எழுந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து ரயில்வே நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.

உஷார்!! கழிவறை தண்ணீரில் சுட சுட தேநீர்! எழும்பூர் ரயில் நிலையத்தில் அலட்சியம்!!

இந்த புகாரின் அடிப்படையில், ரயில்வே நிர்வாகம் சம்பந்தப்பட்ட கடையை மூட உத்தரவிட்டுள்ளது. மேலும் மற்ற கடைகளும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதா என விசாரணையையும் மேற்கொண்டு வருகிறது. மேலும் தரமான தண்ணீரையே தேநீர் மற்றும் உணவகங்களில் பயன்படுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் பாலில் கலப்படம் ஏதும் கலக்கவில்லை என்றும் சம்பந்தப்பட்ட ஊழியரிடம் விசாரணை நடப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it