பாடத் திட்டத்தில் பகவத் கீதை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!
பாடத் திட்டத்தில் பகவத் கீதை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ள குஜராத் மாநிலத்தில், பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில், கல்வித் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது.
அப்போது மாநில கல்வி அமைச்சர் ஜீது வகானி கூறியதாவது: “பகவத் கீதை நூலில் கூறப்படும் வாழ்க்கை நெறிமுறிகள், கோட்பாடுகள், அனைத்து மதத்தினராலும் ஏற்கப்பட்டுள்ள ஒன்று.
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அறிவித்துள்ளது. நம் கலாச்சாரம், பண்பாடு, அறிவுக் களஞ்சியங்கள் மாணவர்களுக்கு கற்றுத் தரப்படும்.
அதன்படி, குஜராத்தில் வரும் 2022 - 2023-ம் கல்வியாண்டில், ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் பகவத் கீதை சேர்க்கப்படும்.
இதைத் தவிர, பகவத் கீதையின் அடிப்படையில் பல போட்டிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான பாடப் புத்தகம் உள்ளிட்டவை பள்ளிகளுக்கு வழங்கப்படும்” என்று அவர் கூறினார்.

