Theme Check

BIG ALERT : 41 மருந்துகள் போலி... பகீர் தகவல்!!

BIG ALERT : 41 மருந்துகள் போலி... பகீர் தகவல்!!

BIG ALERT : 41 மருந்துகள் போலி... பகீர் தகவல்!!
X

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 41 மருந்துகள் தரமற்றவையாக இருந்ததாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து -மாத்திரைகளும் மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோல போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் 1,233 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் காய்ச்சல், இதய பாதிப்பு, வயிற்றுப்போக்கு, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 41 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.

drug alert

இதையடுத்து அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தரமற்ற மருந்துகளை என்று கண்டறியப்பட்டவற்றில் பெரும்பாலானவை இமாசலப் பிரதேசம், அரியானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது.

newstm.in

Next Story
Share it