தேர்தல் பிரச்சாரத்தில் பிக்பாஸ் ஆரி ?

தேர்தல் பிரச்சாரத்தில் பிக்பாஸ் ஆரி ?

தேர்தல் பிரச்சாரத்தில் பிக்பாஸ் ஆரி ?
X

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் வெற்றியாளரான நடிகர் ஆரி வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

நடிகர் ஆரி அர்ஜுனன், தமிழக தேர்தல் ஆணையத்துடன் இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி உருவாக்கப்பட்டுள்ள ஒரு விழிப்புணர்வு வீடியோவில் அவர் நடித்துள்ளார்.அதில் வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். இந்த அறிவுரை தொண்டர்களுக்கும் பொருந்தும் என்று குறிப்பிடும் வகையில் இந்த விழிப்புணர்வு வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் நாட்டுக்காக ஓட்டு போடுங்க. உங்களுக்காக மாஸ்க் போடுங்க என்கிற வாசகம் இட்மபெற்றுள்ளது. இதன்மூலம் வாக்கில் அவசியத்தையும் உடல்நல பாதுகாப்பு குறித்த கருத்தும் ஒருங்கே அமைந்துள்ளது.ஓட்டு போடுவது எப்படி நமது கடமையோ, அதேபோல் சமூக இடைவெளி யோடு மாஸ்க் அணிந்து ஓட்டு போடுவது நமது கடமையாகும் என்று நடிகர் ஆரி கூறுவதுடன் இந்த விழிப்புணர்வு வீடியோ நிறைவுபெறுகிறது.


Tags:
Next Story
Share it