அவதூறு பேச்சால் பரபரப்பு- பிக்பாஸ் பிரபல நடிகை கைது !!
அவதூறு பேச்சால் பரபரப்பு- பிக்பாஸ் பிரபல நடிகை கைது !!

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் பிக் பாஸ் பிரபல நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியில் இளம் நடிகையாக வலம் வருபவர் யுவிகா செளத்ரி. இவர், தொடக்கத்தில் பெரிய அறிமுகம் இல்லாமல் இருந்த இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். மற்ற பிரபலங்களைப் போலவே சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் யுவிகா, தினமும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில், கடந்த மே மாதம் பட்டியலின சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அதேநேரத்தில் யுவிகா செளத்ரி பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. யுவிகா செளத்ரி மீது போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. எனினும் அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரியிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் நடிகை யுவிகா செளத்ரியை ஹரியானா போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜாமீன் கோரிய அவர், ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், யுவிகா செளத்ரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

newstm.in

