பிக்பாஸ் போட்டியாளர் பாலாஜியின் தந்தை திடீர் மரணம்! கதறியழுத சோகம்! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

பிக்பாஸ் போட்டியாளர் பாலாஜியின் தந்தை திடீர் மரணம்! கதறியழுத சோகம்! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

பிக்பாஸ் போட்டியாளர் பாலாஜியின் தந்தை திடீர் மரணம்! கதறியழுத சோகம்! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!
X

பிக்பாஸ் போட்டியாளர் பாலாஜியின் தந்தை முருகதாஸ் திடீரென மரணமடைந்தார். அவருக்கு ரசிகர்களும், நண்பர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல மாடலான பாலாஜி, சர்வதேச ஆணழகன் போட்டியில் பங்கேற்று வெற்றி அடைந்தார். இதன்மூலம் அவருக்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

நிகழ்ச்சியின் இறுதி போட்டி வரை முன்னேறிய அவர், முடிவில் இரண்டாவது இடம் பிடித்தார். அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவர் பிரபலமானார். பல்வேறு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறினர்.

இந்நிலையில் பாலாஜியின் தந்தை முருகதாஸ் திடீரென மரணமடைந்துள்ளார். தந்தைக்கு இளைய மகனாக பாலாஜி செய்யும் இறுதிச் சடங்கு தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பாலாஜிக்கு உடன் பிறந்த மூத்த சகோதர் உள்ளார். இருவரும் தந்தையின் உடலை பார்த்து கதறி அழும் வீடியோ காண்போரை கண்கலங்க வைக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு பாலாஜியின் தாய் காலமானார். இதுகுறித்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசியபோது கதறி அழுதுவிட்டார். தற்போது அவருடைய தந்தையும் இறந்துவிட்டார். இதனால் ரசிகர்கள் பலர் சமூகவலைதளங்களில் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

தந்தையின் மரணம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாலாஜி “இதுவும் கடந்து போகும்” என தெரிவித்துள்ளார். அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளர்களும், நண்பர்களும் இரங்கல் கூறி வருகின்றனர்.

Tags:
Next Story
Share it