பிக்பாஸ் கவின் நடிக்கும் படம் ஓ.டி.டி-யில் வெளியீடு..?

பிக்பாஸ் கவின் நடிக்கும் படம் ஓ.டி.டி-யில் வெளியீடு..?

பிக்பாஸ் கவின் நடிக்கும் படம் ஓ.டி.டி-யில் வெளியீடு..?
X

சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானவர் கவின். அதை தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3-யில் போட்டியாளராக பங்கேற்றார். நிகழ்ச்சியின் இறுதிவரை விளையாடிய அவர், ரூ. 5 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேறினார்.

தற்போது இவர் வினித் வரபிரசாத் இயக்கத்தில் ‘லிப்ட்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் என்பவர் நடித்துள்ளார். லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் பணிகள் அனைத்து முடிக்கப்பட்டு ரிலீஸுக்கு திட்டமிடப்பட்டன.

ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் லிஃப்ட் படத்தை ஓ.டி.டி-யில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதுதொடர்பாக லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ரவீந்திரன் ஜூன் 20-ம் தேதிக்கு மேல் சூழ்நிலையைப் பார்த்துவிட்டு ரிலீஸ் செய்வது முடிவு செய்யப்படும். ஆனால் லிப்ட் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய படம் என்று கூறியுள்ளார்.

Tags:
Next Story
Share it