பிக்பாஸ் சீசன் 5 இந்த மாதம் தொடங்கவில்லையாம் !!
பிக்பாஸ் சீசன் 5 இந்த மாதம் தொடங்கவில்லையாம் !!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்பதால் அந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் மவுசு.
ஏற்கனவே நான்கு சீசன்கள் முடிவுற்ற நிலையில், முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை வென்றுள்ளனர். 5வது சீசன் தொடங்கப்படும் நாளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடத்தப்படும். கொரோனா ஊரடங்கு காரணமாக பிக்பாஸ் 4 நிகழ்ச்சி திட்டமிட்டபடி ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை. அக்டோபர் மாதம் தொடங்கி இந்தாண்டு ஜனவரி 16 வரை ‘பிக்பாஸ் 4’ நடைபெற்றது.
அதே போல், இந்தாண்டும் அக்டோபர் மாதத்தில் பிக்பாஸ் 5 நிகழ்ச்சியை தொடங்க அதன் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர். மற்ற சீசன்களை போலவே இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

