விரைவில் துவங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5- ஆனால் கமல்...?

விரைவில் துவங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5- ஆனால் கமல்...?

விரைவில் துவங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5- ஆனால் கமல்...?
X

தமிழில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் துவங்கவுள்ளதாகவும், அதற்காக போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் நிகழ்ச்சிக் குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பானதை தொடர்ந்து, ஒட்டுமொத்த டிவி ரியாலிட்டி ஷோகளுக்கான நடைமுறையே மாறிவிட்டது. குறிப்பிட்ட தொலைக்காட்சி மட்டுமில்லாமல், மற்ற தொலைக்காட்சிகளிலும் பிக்பாஸ் சாயலுடன் கூடிய ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுகின்றன.

எனினும் பிக்பாஸ் நிகழ்ச்சியை அடிச்சுக்க முடியவில்லை என்பது தான் உண்மை. நிகழ்ச்சியின் கரு தமிழ் சமுதாயத்திற்கு புதியது என்பது ஒருபுறம் உண்மை என்றாலும், நிகழ்ச்சியை தொகுத்தி வழங்கி வரும் கமல்ஹாசன் மேலும் புதுமையை சேர்க்கிறார். அவர் இருப்பது தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான வலிமை.

இதுவரை மொத்தம் 4 சீசன்கள் ஒளிப்பரப்பாகிவிட்டன. அதில், கடந்த சீசன் கொரோனா காரணமாக தாமதமாக ஒளிப்பரப்பை தொடங்கியது. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூனில் துவங்கப்பட்டு அடுத்த மூன்று மாதத்திற்குள் முடிக்கப்பட்டு விடும். ஆனால் கடந்த சீசன் அக்டோபரில் தான் துவங்கியது. ஜனவரி 17ம் தேதி நிறைவடைந்தது.

எனினும், இந்தாண்டுக்கான நிகழ்ச்சியை திட்டமிட்டபடி தொடங்க நிகழ்ச்சிக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிந்து, புதிய அரசு ஆட்சி அமைத்த பின் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகவுள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகளை துவங்கிட நிகழ்ச்சிக் குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.

ஆனால் இம்முறை பிக்பாஸ் 5-வது சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என்பது சந்தேகமே. நடிகராக மட்டுமில்லாமல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகவும் அவர் இருப்பதால், இந்த சந்தேகம் எழுந்துள்ளது. தேர்தலுக்கு பிறகும் அவர் கட்சியை பலப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் அமையவுள்ளன. அதனால் கமல்ஹாசனுக்கு பதில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை புதியதாக பிரபலமான ஒரு நடிகர் / நடிகை தொகுத்து வழங்கக்கூடும்.


Tags:
Next Story
Share it