Theme Check

ரூ.50 லட்சம் மனைவிக்கு கிஃப்ட் கொடுக்கும் பிக்பாஸ் வின்னர் ராஜூ!!

ரூ.50 லட்சம் மனைவிக்கு கிஃப்ட் கொடுக்கும் பிக்பாஸ் வின்னர் ராஜூ!!

ரூ.50 லட்சம் மனைவிக்கு கிஃப்ட் கொடுக்கும் பிக்பாஸ் வின்னர் ராஜூ!!
X

விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ராஜூ வெற்றி பெற்றார்.

18 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அமீர், நிரூப், பிரியங்கா, ராஜு, பாவனி ஆகிய ஐந்து பேர் இறுதிப் போட்டிக்கு சென்றனர். இறுதி எவிக்ஷனான அமீரும், நிரூப்பும் வெளியேறினர்.

மீதமிருந்த ராஜு, பிரியங்கா, பாவனி மூவரில் ராஜு வின்னர் ஆனார். பரிசு தொகையாக 50 லட்ச ரூபாய் வென்றார் ராஜு. பிக் பாஸ் வெற்றிக்கு பின்னர் முதல் முறையாக பேட்டியளித்துள்ள ராஜு தன்னை தேடி ஏராளமான பட வாய்ப்புகள் வருவதாக தெரிவித்துள்ளார்.

raju

மேலும் பரிசுத்தொகை வைத்து மனைவிக்கு என்ன பரிசு அளிக்க போகிறீர்கள் என ராஜுவிடம் கேட்கப்பட்டது.
அதற்கு மொத்த பணத்தையும் அவளுக்கு தான் தருவேன் என்றும் இதுவரை எதுவுமே என்னிடம் எதிர்பார்க்காத தன் மனைவியை இனி வெற்றி பணத்தை வைத்து மகிழ்ச்சியாக பார்த்துக்கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

raju

ராஜூவுக்கு போட்டி வெற்றியாளர் என்ற முறையில் 50 லட்ச ரூபாய் பணம் மற்றும் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்காக வாரம் ஒன்றரை லட்ச ரூபாய் என 21 லட்ச ரூபாய் என, மொத்தம் 71 லட்ச ரூபாய் பரிசாக கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

newstm.in

Next Story
Share it