Theme Check

BIG BREAKING: பாஜக முதல்வர் திடீர் ராஜிநாமா! மத்தியில் பரபரப்பு!

BIG BREAKING: பாஜக முதல்வர் திடீர் ராஜிநாமா! மத்தியில் பரபரப்பு!

BIG BREAKING: பாஜக முதல்வர் திடீர் ராஜிநாமா! மத்தியில் பரபரப்பு!
X

உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் (பாஜக) இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் திரிவேந்திர சிங் ராவத்துக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏக்களில் ஒரு தரப்பினர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில், திடீரென இன்று முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், ஆளுநர் ராணி மெளரியாவை சந்தித்து தன்னுடைய ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த வருடத்தின் இறுதியில் உத்தரகண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திரிவேந்திர சிங் ராவத்தின் ராஜினாமா பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. திரிவேந்திர சிங்கின் ராஜினாமா, பிற மாநில தேர்தல்களிலும் பாஜவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. சமீபத்தில் புதுச்சேரியில் காங்கிரஸ் முதல்வர் நாராயணசாமி ராஜிநாமா செய்துள்ளதற்கு பின்னணியிலும் பாஜக காரணம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், உத்தரகண்ட் முதல்வரின் ராஜிநாமா பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:
Next Story
Share it