#BIG NEWS:- மும்பை விமான நிலையத்தை கைப்பற்றியது அதானி குழுமம்..!
#BIG NEWS:- மும்பை விமான நிலையத்தை கைப்பற்றியது அதானி குழுமம்..!

மும்பை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பை ஜிவிகே குழுமத்திடம் இருந்து அதானி குழுமத்தின் அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் கைப்பற்றியது. இதன் மூலம், நாட்டின் மிகப்பெரிய விமான நிலைய உட்கட்டமைப்பு நிறுவனமாக அதானி குழுமம் உருவெடுத்துள்ளது.
மத்திய அரசு, மகாராஷ்ட்ர மாநில அரசு மற்றும் நகர் மற்றும் தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் ஒப்புதல் கிடைத்ததை அடுத்து மும்பை விமான நிலைய நிர்வாகக் குழு இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
மும்பை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாக உரிமையைக் கைப்பற்றியதன் மூலம் அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் தற்போது இந்திய விமான நிலையங்களின் நிர்வகிப்பில் 25 சதவீத பங்களிப்பைத் தன் வசம் கொண்டுள்ளது. மொத்தம் 8 விமான நிலையங்களின் நிர்வாக உரிமையை கொண்டுள்ள இந்நிறுவனம், விமான சரக்குப் போக்குவரத்திலும் 33 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இதனால், நாட்டின் மிகப்பெரிய விமான நிலைய நிர்வகிப்பு நிறுவனமாக அதானி குழுமம் விளங்குகிறது.

மேலும், நவி மும்பை சர்வதேச விமான நிலைய கட்டுமான செயல்பாடுகள் அடுத்த மாதத்திற்குள் தொடங்கப்படும். 2024ல் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்” என்று அவர் கூறினார்.

