#BIG NEWS:- மத்திய அமைச்சரானார் பா.ஜ.க தலைவர் எல்.முருகன்.. 43 புதிய மத்திய அமைச்சர்கள் பட்டியல்..!
#BIG NEWS:- மத்திய அமைச்சரானார் பா.ஜ.க தலைவர் எல்.முருகன்.. 43 புதிய மத்திய அமைச்சர்கள் பட்டியல்..!

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று மாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், புதிதாக பதவியேற்க உள்ள 43 மத்திய அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகனின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
புதிய அமைச்சர்கள் பதவியேற்க வாய்ப்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், இணை அமைச்சர் அஸ்வினி செளபே, மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய அமைச்சர்கள் சஞ்சய் தாத்ரே, ராவ் சாகேப், கர்நாடாகாவை சேர்ந்த மத்திய ரசாயனத் துறை அமைச்சர் சதானந்தா கவுடா, சந்தோஷ் சுங்குவார், பாபுல் சுப்ரியோ, ரத்தன் லால் கட்டாரியா, பிரதாப் சாரங்கி, குழந்தைகள் - பெண்கள் நலத்துறை அமைச்சர் தபாஸ்ரீ சவுத்ரி, தவார் சந்த் கெலாட் ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.
43 leaders to take oath today in the Union Cabinet expansion. Jyotiraditya Scindia, Pashupati Kumar Paras, Bhupender Yadav, Anupriya Patel, Shobha Karandlaje, Meenakshi Lekhi, Ajay Bhatt, Anurag Thakur to also take the oath. pic.twitter.com/pprtmDu4ko
— ANI (@ANI) July 7, 2021
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு, மத்திய அமைச்சரவையில் இதுவரை மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. முதன்முறையாக மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
43 புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். பெண்கள், இளைஞர்கள், எஸ்சி 12. எஸ்டி 8, ஓபிசி 27 பேர் அமைச்சர்களாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.மத்திய அமைச்சரவை விரிவாக்கத்திற்கு முன்னதாக பாஜக எம்பிக்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்கள்.
முன்னதாக, தமிழ்நாடு பாஜக தலைவராக உள்ள எல்.முருகன் மத்திய அமைச்சராக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எல்.முருகன் பங்கேற்ற நிலையில் அவர் அமைச்சராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எல்.முருகன் மத்திய அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்காரணமாக தமிழ்நாடு பாஜக தலைவராக வேறொருவர் நியமிக்கப்பட உள்ளார்.

