#BIG NEWS:- பேராசிரியர் பணியிடங்களுக்கு பிஹெச்.டி, நெட் தேர்வு தேர்ச்சி இரண்டும் கட்டாயம்..!
#BIG NEWS:- பேராசிரியர் பணியிடங்களுக்கு பிஹெச்.டி, நெட் தேர்வு தேர்ச்சி இரண்டும் கட்டாயம்..!

பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமில்லாமல் பிஹெச்.டி படிப்பும் முடித்திருக்க வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2021 - 2022-ம் அண்டுக்கான புதிய ஒழுங்குமுறையில் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2018 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விதி இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக உதவி பேராசியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள், பி.எச்.டி பட்டம் முடித்திருக்க வேண்டும் அல்லது நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது நடைமுறையில் இருந்தது. நெட் தேர்வில் தேர்ச்சி பெற்று உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு நியமிக்கப்படக்கூடியவர்களுக்கு 5 முதல் 10 வரை வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்பட்டது

அதே சமயம் பிஹெச்.டி படித்துவிட்டு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக்கூடியவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் 30 வழங்கப்பட்டது. இது நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மதிப்பை குறைப்பதாக யுஜிசி கருதுகிறது.
இதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு, பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் (யுஜிசி) இந்த புதிய விதிமுறைகளை அப்போதைய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார். அது தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

