Theme Check

#BIG NEWS:- தமிழகத்திற்கு கூடுதல் தளர்வுகள் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்..!

#BIG NEWS:- தமிழகத்திற்கு கூடுதல் தளர்வுகள் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்..!

#BIG NEWS:- தமிழகத்திற்கு கூடுதல் தளர்வுகள் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்..!
X

தமிழ்நாட்டில், கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலில், கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தத் தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கவும் மற்றும் அவசியம் ஏற்படின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, தமிழக முதல்வர் தலைமையில் இன்று (12-2-2022) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து தொற்றுப் பரவலை கட்டுக்குள் வைத்திடவும், குறைத்திடவும் பின்வரும் கட்டுப்பாடுகள் மட்டும் 16-2- 2022 முதல் 2-3-2022 வரை நடைமுறைப்படுத்தப்படும்.

  • சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கும் உள்ள தடை தொடரும்
  • திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 200 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.
  • இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 100 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.
  • நர்சரி பள்ளிகள் (எல்கேஜி, யுகேஜி) மற்றும் மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் (ப்ளே ஸ்கூல்) திறக்க அனுமதி
  • பொருட்காட்சிகள் நடத்த அனுமதி.

மேற்கண்ட கட்டுப்பாடுகள் தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விதிக்கப்பட்ட ஏனைய கட்டுபாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.

கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Next Story
Share it