#BIG NEWS :- பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்..!!

#BIG NEWS :- பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்..!!

#BIG NEWS :- பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்..!!
X

தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்த ஜெயந்தி, உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 76.

கன்னட சினிமாவில் வெளியான மிஸ் லீலாவதி என்கிற படத்தில் நடித்ததற்காக சிறு வயதிலே தேசிய விருது பெற்றவர் நடிகை ஜெயந்தி. தமிழில் 1960-ம் ஆண்டு வெளியான யானை பாகன் என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் அவர் நடித்துள்ளார்.

இருவர் உள்ளம், படகோட்டி, பாமா விஜயம், எதிர் நீச்சன், இரு கோடுகள், கோபாலா கோபாலா, அன்னை காளிகாம்பாள் போன்றவை ஜெயந்தி நடித்த தமிழ் படங்களில் முக்கியமானவை ஆகும். தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே ஜெயந்திக்கும் ஆஸ்துமா பிரச்னை இருந்து வந்தது. இதனால் அவ்வப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார். ஜெயந்தியின் திடீர் மரணம் தென்னிந்திய சினிமா துறையினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அவருடைய மறைவுக்கு திரையுலகத்தினரும் ரசிகர்களும் இரங்கல் கூறி வருகின்றனர்.

Tags:
Next Story
Share it