Theme Check

#BIG NEWS:- ஒவ்வொரு நபருக்கும் மருத்துவ அடையாள எண்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

#BIG NEWS:- ஒவ்வொரு நபருக்கும் மருத்துவ அடையாள எண்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

#BIG NEWS:- ஒவ்வொரு நபருக்கும் மருத்துவ அடையாள எண்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
X

நாட்டு மக்களின் மருத்துவ தகவல்கள் அடங்கிய அடையாள எண் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

கடந்தாண்டு சுதந்திர தினத்தின் போது உரையாற்றிய பிரதமர் மோடி, மின்னணு மருத்துவ திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி சோதனை முயற்சியாக 6 யூனியன் பிரதேசங்களுக்கு மட்டும் இத்திடம் செயல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த திட்டம் நாடு முழுவதும் செயல்பாட்டு வரும் என மோடி ட்விட்டரில் பதிவிட்டார். மேலும் மருத்துவ துறையில் புதிய அத்தியாயம் எழுதப்பட உள்ளது. மக்களுக்கு எளிதாக மருத்துவ பயன்களை பெற வழிவகுப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.

மின்னணு மருத்துவ திட்டம் மூலம் பதிவு செய்யப்படும் தனிநபருடைய மருத்துவ தேவைகள் ரகசியமாக வைக்கப்படும். குறிப்பிட்ட மருத்துவ தேவைக்கான தகவல்களையும் எளிதில் அவர்கள் பெற முடியும்.

இந்த திட்டத்தில் பதிவு செய்யப்படும் ஒவ்வொருவருக்கும் தனி அடையாள அட்டை வழங்கப்படும். மேலும் செல்போன் செயலி மூலம் மருத்துவ சேவைகளை அவர் எளிதாகப் பெற வழி ஏற்படுத்தப்படும் என தெரிய வந்துள்ளது.


Tags:
Next Story
Share it