#BIG NEWS: எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு..!
#BIG NEWS: எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு..!

தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (14ம் தேதி) எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில், சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர், கொறடா, துணை கொறடா, பொருளாளர், செயலாளர் மற்றும் துணைச் செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அதன்படி, எதிர்க்கட்சி துணைத் தலைவராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.தொடர்ந்து, கொறடாவாக தொண்டாமுத்தூர் எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி, துணை கொறடாவாக அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி, பொருளாளராக கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜூ, செயலாளராக பாலக்கோடு எம்எல்ஏ கே.பி.அன்பழகன், துணைச் செயலாளராக ஆலங்குளம் எம்எல்ஏ பி.ஹெச்.மனோஜ் பாண்டியன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் பழனிசாமி சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:
Next Story

