Theme Check

#BIG NEWS:- 2 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி : எய்ம்ஸ் இயக்குநர் தகவல்..!

#BIG NEWS:- 2 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி : எய்ம்ஸ் இயக்குநர் தகவல்..!

#BIG NEWS:- 2 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி : எய்ம்ஸ் இயக்குநர் தகவல்..!
X

இந்தியா இரண்டு கொரோனா அலைகளை சந்தித்துவிட்டது. தற்போது, கொரோனா இரண்டாவது நிலையிலிருந்து நாடு மீண்டு மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்புகிறது.

ஆனால், மக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கவனமாகக் கடைப்பிடிக்காவிட்டால் 6 முதல் 8 வாரங்களில் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள நேரிடும் என டில்லி எய்ம்ஸ் இயக்குநர் ரஞ்சித் குலேரியா எச்சரித்துள்ளார்.

இத்தகைய சூழலில், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதே அடுத்தடுத்த அலைகளிலிருந்து தப்பிக்கச் சிறந்த வழியாகும். மேலும், மூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படலாம் என்றும், பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் மாறுபட்ட கருத்துகள் நிலவும் சூழலில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியமாகிறது.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள ரஞ்சித் குலேரியா, வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து 2 முதல் 17 வயது வரை சிறுவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில், ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு வழங்கி பரிசோதிக்கும் சோதனை டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 7ம் தேதி தொடங்கியது.

மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பின் வல்லுநர் குழு அனுமதியளித்துள்ளதைத் தொடர்ந்து இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அன்றைய தினம் முதல்முறையாக 2 வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு கோவாக்சின் மருந்து பரிசோதிக்கப்பட்டது. இந்த நிறுவனம் 2வது கட்ட கிளிக்கல் பரிசோதனையையும் வெற்றிகரமாக முடித்துள்ளது.

3வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை முடிவடைந்தால் செம்படம்பர் முதல் குழந்தைகளுக்கு செலுத்த அனுமதி கிடைக்கும்.

இதனையொட்டி, வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து 2 முதல் 17 வயது வரை கொண்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவித்திருக்கிறார். 3வது பரிசோதனை முடிந்த கையோடு கோவாக்சின் தடுப்பூசியை 2 வயது முதலான குழந்தைகளுக்கு செலுத்த மத்திய அரசின் அனுமதியும் கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

Tags:
Next Story
Share it