Theme Check

#BIG NEWS:- இவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி..! - அமைச்சர் நாசர் உறுதி

#BIG NEWS:- இவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி..! - அமைச்சர் நாசர் உறுதி

#BIG NEWS:- இவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி..! - அமைச்சர் நாசர் உறுதி
X

ஆவின் விற்பனை பொருட்களின் தரம் குறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் சேலத்தில் ஆய்வு செய்தார். ஆவின் பால் பண்ணையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், தொழிலாளர்களிடம் பணி பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.

அதன் பின்னர் அவர் அளித்த பேட்டியில், “ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டதால் 270 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டாலும் பால் விற்பனை 1.50 லட்சம் லிட்டர் அதிகரித்துள்ளது. ஆவினில் புரோக்கர்கள் வாயிலாக தவறான முறையில் இளநிலை அந்தஸ்தில் 234 பேர், 460 பணியாளர்கள் நியமித்தது குறித்து விசாரணை நடக்கிறது.

மேலாளர் தகுதியில் 174 பேர் நியமனம் ரத்து செய்யப்பட்டு, புதிதாக நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 25 ஆவின் ஒன்றியங்களிலும் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சேலம், தேனி, மதுரையில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது.

கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு, கடந்த தீபாவளியின்போது 1.5 டன் இனிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. அதற்கான பணத்தை அவர் செலுத்தவில்லை. ஆதாரம் இருப்பதால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் பணியின்போது இறந்த ஆவின் ஊழியர்களின் வாரிசுகள் 48 பேருக்கு, விரைவில் கருணை அடிப்படையில் பணி வழங்கப்படும்” எனக் கூறினார்.
Tags:
Next Story
Share it