சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரிய விசிலு.. சென்னைக்கு வந்தாச்சு நம்ம தல தோனி!!
சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரிய விசிலு.. சென்னைக்கு வந்தாச்சு நம்ம தல தோனி!!

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டிகள், வரும் 29ஆம் தேதி தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியிலேயே மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிகள் மோதுகிறது.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் விளையாடும் வீரர்கள், சென்னைக்கு வந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை அணியின் கேப்டனான தோனி, நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையம் வந்தார். தோனியின் வருகையை அறிந்த அவரது ரசிகர்கள், விமான நிலையத்தில் திரண்டனர்.
சிலர் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 2020 ஐபிஎல் போட்டிகள் மார்ச் 29ம் தேதி தொடங்க உள்ளது. உலககோப்பை அரையிறுதி தோல்விக்கு பிறகு கடந்த 7 மாத காலமாக கிரிக்கெட் களத்தில் தோனியை காண முடியாமல் போனது.
இந்நிலையில் தோனியின் சென்னை வருகை அவரது ரசிகர்களுக்கு இடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று முதல் அவர் சேப்பாக்கம் சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் சக வீரர்களுடன் பயிற்சி மேற்கொள்வார் என எதிர்பார்க்கிறது.
newstm.in



