Theme Check

#BIGNEWS ஏப்ரல் 25க்குள் 45 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி !!

#BIGNEWS ஏப்ரல் 25க்குள் 45 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி !!

#BIGNEWS ஏப்ரல் 25க்குள் 45 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி !!
X

தமிழகத்தில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனைக்கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தொடக்கத்தில் பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி போடுவதற்கு போதிய ஆர்வம் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது கொரோனா அச்சம் காரணமாக பலர் தாமாகவே முன் வந்து தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் இதுவரை 41.73 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இந்நிலையில் அடுத்த 10 நாளில் ஏப்ரல் 25க்குள் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குனர் விடுத்த செய்திக்குறிப்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணிகளை முழு வீச்சில் செயல்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு விட்டனர் என்கிற நிலை உருவாக்கப்படும். இதற்காக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு தடுப்பூசிகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வழி காட்டுதலை பின்பற்றி சுகாதாரத்துறை வாகனங்களில் அனைத்து இடங்களுக்கும் சென்று போதுமான சுகாதாரப் பணியாளர்களை வைத்து தடுப்பூசி போடும் பணிகளை 100 சதவீதம் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டிருப்பதுடன் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

NEWSTM.IN

Tags:
Next Story
Share it