Theme Check

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் பினராயி விஜயன்.. மருத்துவர்கள் கூறிய முக்கிய அறிவுரை !!

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் பினராயி விஜயன்.. மருத்துவர்கள் கூறிய முக்கிய அறிவுரை !!

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் பினராயி விஜயன்.. மருத்துவர்கள் கூறிய முக்கிய அறிவுரை !!
X

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை அதன் வீரியம் குறையாமல் தொடர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அசுர வேகம் எடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.

குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா, ராஜன்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் மிக அதிக அளவில் பாதிப்பை எதிர்கொள்கின்றன. அரசியல் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடந்த 8ஆம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. முன்னதாக கேரள சட்டமன்றத்தேர்தலையொட்டி பல்வேறு கூட்டங்களிலும் பரப்புரைகளிலும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்றிருந்தார். இதைத்தொடர்ந்து பினராயி விஜயனின் மகளுக்கு கடந்த 6 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானது.

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர் கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி கொரோனாவுக்கான முதல் தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று உறுதியாகின நிலையில் பினராயி விஜயனுக்கு 76 வயது ஆவதால் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் இன்று அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்தது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


newstm.in

Tags:
Next Story
Share it