Theme Check

#BIG NEWS:- விடைபெற்றார் பிபின் ராவத்..!!

#BIG NEWS:- விடைபெற்றார் பிபின் ராவத்..!!

#BIG NEWS:- விடைபெற்றார் பிபின் ராவத்..!!
X

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர். பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 ராணுவ வீரர்கள் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து டெல்லியில் உள்ள பாலம் விமான தளத்திற்கு நேற்று இரவு 8 மணி அளவில் கொண்டு வரப்பட்டன.

Who was Madhulika Rawat, wife of CDS Bipin Rawat, killed in Army chopper  crash? | Latest News India - Hindustan Times
இதைத்தொடர்ந்து, பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்களுக்கும் பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படைகளின் தளபதிகள் மலர் தூவியும், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொதுமக்களும், மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை ராணுவ வீரர்களும் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் திமுக எம்.பிக்கள் ஆகியோர் பிபின் ராவத் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

BREAKING: பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி இறுதி ஊர்வலம் தொடங்கியது..!
இந்நிலையில், பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் இறுதி ஊர்வலம் தொடங்கி காமராஜ் மார்க் வழியாக டெல்லி கண்டோன்மென்ட் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது .

பிரிட்டன், பிரான்ஸ், தூதர்கள், இலங்கை, பூடான், நேபாளம், வங்கதேச ராணுவதளபதிகள் பிபின் ராவத்தின் உடலுக்கு மலர் வளையங்கள் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இறுதி அஞ்சலி நிகழ்வில் பிபின் ராவத்தின் இரு மகள்கள், குடும்பத்தினர், ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர். உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.

பிபின் ராவத்தின் உடல் மீது பொருத்தப்பட்டிருந்த தேசிய கொடி அவரது மகள்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் 17 சுற்று பீரங்கி குண்டுகள் முழங்க 800 வீரர்களின் மரியாதையுடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் உடல் தகனம் செய்யப்பட்டது.

Next Story
Share it