Theme Check

வாக்காளர்களிடம் ஹிஜாப்பை அகற்றக்கூறிய பாஜக ஏஜென்ட்.. மதுரை மேலூரில் பரபரப்பு..!

வாக்காளர்களிடம் ஹிஜாப்பை அகற்றக்கூறிய பாஜக ஏஜென்ட்.. மதுரை மேலூரில் பரபரப்பு..!

வாக்காளர்களிடம் ஹிஜாப்பை அகற்றக்கூறிய பாஜக ஏஜென்ட்.. மதுரை மேலூரில் பரபரப்பு..!
X

தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை மேலூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு ஹிஜாப் அணிந்து வந்த வாக்காளர்களிடம் ஹிஜாப்பை அகற்றுமாறு பாஜக ஏஜென்ட் கூறியுள்ளார். இதற்கு தேர்தல் அலுவலர்கள், மற்ற கட்சிகளின் முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தேர்தல் அலுவலர்களிடமும் திமுக, அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளின் முகவர்களிடமும் வாக்குவாதம் செய்த பாஜக ஏஜென்ட் வெளியேற்றப்பட்டார்.

இதனால், சிறிது நேரம் நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு பாஜகவின் மாற்று ஏஜென்ட் வந்ததும் மீண்டும் தொடங்கியது.
Next Story
Share it