Theme Check

இளம்பெண்ணை காரில் கடத்தி கட்டாய திருமணம் செய்ய முயற்சி.. பாஜகவினர் கைது !!

இளம்பெண்ணை காரில் கடத்தி கட்டாய திருமணம் செய்ய முயற்சி.. பாஜகவினர் கைது !!

இளம்பெண்ணை காரில் கடத்தி கட்டாய திருமணம் செய்ய முயற்சி.. பாஜகவினர் கைது !!
X

கோவையில் இளம்பெண்ணை காரில் கடத்தி கட்டாய திருமணம் செய்ய முயற்சித்த பாஜகவை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த மசக்கவுண்டன்புதூரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (38). பாஜக நிர்வாகியான இவர் அதேபகுதியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்துள்ளார். இளம்பெண் பின்னால் சுற்றிய சண்முகசுந்தரம், தனது காதலை வெளிப்படுத்தியபோதும், திருமணம் செய்ய சம்மதிக்குமாறு பலமுறை கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பெண் மறுத்துவிட்டார்.
arrested

இதனால் ஏமாற்றம் அடைந்த சண்முகசுந்தரம், பெண்ணின் பெற்றோரிடம் சென்று தனது விருப்பத்தை தெரிவித்தார். ஆனால், பெற்றோர்களும் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டனர் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இளம்பெண் தனது பைக்கில் வெளியே புறப்பட்டார். நடுவழியில் சண்முகசுந்தரம் மற்றும் அவரது நண்பர் விஜயகுமார் (43) ஆகியோர் காரில் பைக்கை வழிமறித்தனர். பின்னர், வலுக்கட்டாயமாக இளம்பெண்ணை காரில் கடத்திச்சென்றனர்.

arrested

பின்னர், பொன்னேகவுண்டன்புதூர் அருகேயுள்ள ஒரு கோவிலுக்கு அப்பெண்ணை கடத்திச்சென்று ஒரு கோயிலில் வைத்து அவர் இளம்பெண்ணுக்கு கட்டாய தாலிகட்ட முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்களிடம் இருந்து தப்பிய இளம்பெண் இது குறித்து அன்னூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாஜக நிர்வாகிகள் சண்முகசுந்தரம், அவரது நண்பர் விஜயகுமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it