ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்ற பாஜக வேட்பாளர்..!!
ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்ற பாஜக வேட்பாளர்..!!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணிக்கு மாநிலம் முழுவதும் 268 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி பெரும்பாலான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் திமுக கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சி 11வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நரேந்திரன் ஒரு ஓட்டு மட்டுமே பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் நரேந்திரனுக்கு அவரது குடும்பத்தினரோ, நண்பர்களோ கூட வாக்களிக்காததால் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார். பாஜக இவ்வாறு ஒத்த ஓட்டு வாங்குவது இதுவே முதன்முறை அல்ல. கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சி 9வது வார்டில் போட்டியிட்ட பாஜகவை சேர்ந்த கார்த்திக் வாக்கு எண்ணிக்கை முடிவில் ஒரு வாக்கு மட்டுமே பெற்றார் என்பது நினைகூறத்தக்கது.
அதே போல் ஹிஜாப் சர்ச்சை வெடித்த மேலூர் நகராட்சியில் பாஜக படுதோல்வி. பாஜக சார்பில் போட்டியிட்ட அம்சவேணி 10 ஓட்டுகளை மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார். வெற்றியை தன்வசமாக்கியது திமுக.

