சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த பாஜக முதல்வர் வேட்பாளர் மீண்டும் முதல்வராக தேர்வு..!!
சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த பாஜக முதல்வர் வேட்பாளர் மீண்டும் முதல்வராக தேர்வு..!!

நடந்து முடிந்த உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சியைத்தக்க வைத்தது. மொத்தம் உள்ள 70 இடங்களில் பாஜக 47 இடங்களை பிடித்தது. ஆனாலும் அந்த மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி (வயது 46) காதிமா தொகுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
இதனால் புதிய முதல்வர் பதவி யாருக்கு என்ற கேள்வி கடந்த சில நாட்களாக எழுந்தது இந்த நிலையில் டேராடூனில் நேற்று (மார்ச் 21) பாஜக புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், முதல்வராக புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Tags:
Next Story

