Theme Check

முதல்வர் குறித்து அவதூறு.. பாஜக நிர்வாகி கைது.. குமரியில் பரபரப்பு..!

முதல்வர் குறித்து அவதூறு.. பாஜக நிர்வாகி கைது.. குமரியில் பரபரப்பு..!

முதல்வர் குறித்து அவதூறு.. பாஜக நிர்வாகி கைது.. குமரியில் பரபரப்பு..!
X

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்த 6-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக பிரச்சார அணித் தலைவர் ஜெயப்பிரகாஷ் உரையாற்றினார்.

அப்போது அவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக திமுகவினர் அளித்த புகாரின் பேரில், ஆரல்வாய்மொழி போலீசார், ஜெயப்பிரகாஷ் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, நேற்று (7-ம் தேதி) நள்ளிரவு இரணியலில் உள்ள அவரது வீட்டிற்கு நாகர்கோவில் துணை கண்காணிப்பாளர் நவீன் குமார் தலைமையில் சென்ற போலீசார், ஜெயப்பிரகாஷை கைது செய்தனர்.

நள்ளிரவில் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story
Share it