Theme Check

மதக்கலவரம் தூண்டும் விதமாக பதிவிட்டாரா பாஜக செயற்குழு உறுப்பினர்!!

மதக்கலவரம் தூண்டும் விதமாக பதிவிட்டாரா பாஜக செயற்குழு உறுப்பினர்!!

மதக்கலவரம் தூண்டும் விதமாக பதிவிட்டாரா பாஜக செயற்குழு உறுப்பினர்!!
X

மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும் வகையிலோ அல்லது பொது அமைதியை குலைக்கும் வகையிலோ, பொய்யான செய்திகளையும், உண்மை செய்திகளை திரித்தும் சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்றவற்றில் வெளியிடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை காவல் ஆணையார் சங்கர் ஜிவால் கடந்த 28-ம் தேதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அந்த வகையில், இரு மதத்தினரிடையே கலவரம் ஏற்படுத்தும் வகையிலும், (இந்துக் கோவில்கள் இடிக்கப்படுவதாகவும், ஆனால் இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருக்கும் சர்ச் இடிக்கப்படவில்லை எனவும்) மேலும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை அநாகரிகமாக பேசி சமூக வலைத்தளத்தில் மர்ம நபர் ஒருவர் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு “தைரியமா? விடியலுக்கா?” எனும் கருத்து பதிவிட்டு இருந்தார் பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதா மணி.

மதக்கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் வதந்தி பரப்பும் சவுதா மணி மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

விசாரணை மேற்கொண்ட போலீசார் மதக்கலவரம் உருவாக்கும் நோக்கில் பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதா மணி கருத்து பதிவிட்டது உறுதியானது.

இதனையடுத்து சவுதா மணி மீது கலகம் செய்ய தூண்டி விடுதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்தவொரு நபரையும் கலகம் செய்யத் தூண்டுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதேபோல கடந்த 28-ம் தேதி பாஜக நிர்வாகியான வினோஜ் பி செல்வம் என்பவர் மதக்கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டதாக அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it