Theme Check

பாஜக நிர்வாகிகள் பதவிக்கு ஆபத்து ! வெளியான அதிர்ச்சி தகவல் !!

பாஜக நிர்வாகிகள் பதவிக்கு ஆபத்து ! வெளியான அதிர்ச்சி தகவல் !!

பாஜக நிர்வாகிகள் பதவிக்கு ஆபத்து ! வெளியான அதிர்ச்சி தகவல் !!
X

வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி வேட்பாளரை தங்கள் ஓட்டுச் சாவடியில் ஜெயிக்க வைக்கவில்லை எனில் அவர்கள் வகிக்கும் பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் என தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்தார்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி, தமிழக பாஜக தலைவர் முருகன் கட்சி நிர்வாகிகளுக்காக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அவர் பேசியதாவது, சட்டசபையில் தேர்தலில், ஒவ்வொரு நிர்வாகியும், தனது ஓட்டுச்சாவடியில், வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர், பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன் பேசுகையில், நமது நிர்வாகிகள், ஓட்டுச்சாவடியில், வெற்றி பெறாவிட்டால், அந்த பொறுப்பை வகிக்க தகுதி இல்லாதவர்களாக கருத வேண்டும் என தெரிவித்திருந்தார். அதை நானும் வலியுறுத்துகிறேன்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் முருகன், தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தை, மதுரையில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா துவக்கி வைத்தார். ஹிந்துக்களையும், ஹிந்து கடவுள்களையும், இழிவு படுத்தியவர்களை கண்டிக்கும் வகையிலே வேல் யாத்திரை நடத்தினோம்.

தி.மு.க. மக்களை ஏமாற்றவே வேலை கையில் எடுத்துள்ளது. உணர்வு பூர்வமாக வேலை எடுக்கவில்லை. அதனால் தான், கனிமொழி வேலை வாங்க மறுத்து விட்டார். சசிகலா தேர்தல் நிலைப்பாடு என்ன என்று, அறிவித்த பின்னர், எங்கள் கருத்தை தெரிவிப்போம் என்றார். மேலும், அ.தி.மு.க. - பா.ஜ.க கூட்டணி குறித்து பேச்சு நடந்து வருகிறது என தெரிவித்தார்.

Tags:
Next Story
Share it