Theme Check

பாஜக பெண் நிர்வாகி கைது! போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்தது அம்பலம்!

பாஜக பெண் நிர்வாகி கைது! போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்தது அம்பலம்!

பாஜக பெண் நிர்வாகி கைது! போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்தது அம்பலம்!
X

மேற்வங்க மாநிலம் கொல்கத்தாவில் போதைப் பொருள் கடத்தியதாக பாஜக பெண் நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்குவங்க மாநில பாஜக இளைஞரணி செயலாளர் பமீலா கோஸ்வாமி கொல்கத்தாவில் 100 கிராம் போதைப் பொருள் வைத்திருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி அதிரடி சோதனை நடத்தியதில் பமீலாவிடம் போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து பாஜக இளைஞரணி செயலாளர் பமீலா கோஸ்வாமி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப்பிடிக்க வேண்டும் என பாஜக தீவிரமாக பணியாற்றி வரும் சூழலில் அவர்களுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் பாஜக நிர்வாகி போதைப் பொருள் கடத்தில் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

newstm.in

Tags:
Next Story
Share it