Theme Check

பாஜகவிற்கு அடிமேல் அடி.. மொத்தமாக சுருட்டும் அதிமுக.. ஒன்னுகூட கொடுக்கக்கூடாது என தொண்டர்கள் கொந்தளிப்பு !!

பாஜகவிற்கு அடிமேல் அடி.. மொத்தமாக சுருட்டும் அதிமுக.. ஒன்னுகூட கொடுக்கக்கூடாது என தொண்டர்கள் கொந்தளிப்பு !!

பாஜகவிற்கு அடிமேல் அடி.. மொத்தமாக சுருட்டும் அதிமுக.. ஒன்னுகூட கொடுக்கக்கூடாது என தொண்டர்கள் கொந்தளிப்பு !!
X

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளிவந்ததும், திமுக, அதிமுக கூட்டணிகளில் தொகுதி பங்கீடு தொடங்கியுள்ளது. திமுக பக்கம் நிலைமை கட்டுக்குள் உள்ளது. ஆனால், அதிமுக தரப்பிலோ எப்போதும் போல இப்போதும் சர்ச்சைகளும் குழப்பங்களும் தான் நீடிக்கிறது. இதற்கு இடையில் பாஜகவினர் பேச்சுகளும் சர்ச்கைளும்.

இந்த பேச்சுக்கள், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இடங்களை பெறுவதில் சிக்கல்களை ஏற்படுத்தும் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தென் மாவட்டங்களில் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டங்களில் ஒன்று திருநெல்வேலி. கடந்த ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் திமுக கூட்டணி 3, அதிமுக கூட்டணி 2 என வெற்றி பெற்றன. திருநெல்வேலி தொகுதியில் நயினார் நாகேந்திரன் (பாஜக), அம்பாசமுத்திரம் தொகுதியில் இ.சுபயா (அதிமுக), பாளையங்கோட்டை தொகுதியில் எம்.அப்துல் வாகப் (திமுக), நாங்குநேரி தொகுதியில் ரூபி மனோகரன் (காங்கிரஸ்), ராதாபுரம் தொகுதியில் எம்.அப்பாவு (திமுக) ஆகியோர் வெற்றிபெற்று எம்.எல்.ஏக்களாக இருக்கின்றனர்.

nainar nagenthiran

நான்கு பாஜக எம்எல்ஏக்கள் உள்ள மாவட்டங்களில் கட்சியை பலப்படுத்தும் பணி விறுவிறுப்படைந்துள்ளது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கட்சியை பலப்படுத்தும் பணியில் நயினார் நாகேந்திரன் உள்ளார். இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டம் உள்ள திசையன்விளை பேரூராட்சியில் போட்டியிடுவது தொடர்பாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

அதாவது, பாஜகவை பொறுத்தவரை கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்தே அதிமுக உடன் கூட்டணி வைத்து பயணித்து வருகிறது. மக்களவை தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் என இந்த கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இம்முறை அதிமுக கூட்டணியில் பெருவாரியான இடங்களை பெற்று வெற்றி பெற பாஜக திட்டமிட்டுள்ளது. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திசையன்விளை பேரூராட்சியில் ஒரு இடங்களை கூட பாஜகவுக்கு விட்டுக்கொடுக்கமாட்டோம் என அதிமுக நிர்வாகிகள் வெளிப்படையாகவே பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

nainar nagenthiran

குறிப்பாக அதிமுக அமைப்புச் செயலாளர் ஏ.கே.சீனிவாசன் வெளிப்படையாகவே பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திமுகவை வீழ்த்த தனித்து களம் காண்பதே சரி. பாஜக உடன் கைகோர்த்தால் பின்னடைவாக அமைந்துவிடும் என்று திருநெல்வேலி மாவட்ட அதிமுகவினர் கருதுகின்றனராம்.

இந்த விஷயத்தில் கட்சி தலைமையிடம் கறாராக பேசி ஒரு முடிவெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுக இருப்பதாக சொல்லப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவரும், பாஜக எம்.எல்.ஏவுமான நயினார் நாகேந்திரன் தரப்பை ஆட்டம் காணச் செய்துள்ளது. அவரது பேச்சுதான் இந்த நிலைக்கு காரணம் என உள்ளுர் பாஜகவினரே வேதனையில் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. மேலும் திருநெல்வேலி போன்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் இதே நிலை தான் நீடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக- பாஜக இடையே மறைமுக போட்டி ஏற்பட்டுள்ளதாக நிர்வாகிகளே கூறுகின்றனர்.

newstm.in

Next Story
Share it