பாஜக எம்பி கார் பஞ்சர்.. துப்பாக்கியுடன் சுற்றி வளைப்பு!! நாடாளுமன்றத்தில் பரபரப்பு..

பாஜக எம்பி கார் பஞ்சர்.. துப்பாக்கியுடன் சுற்றி வளைப்பு!! நாடாளுமன்றத்தில் பரபரப்பு..

பாஜக எம்பி கார் பஞ்சர்.. துப்பாக்கியுடன் சுற்றி வளைப்பு!! நாடாளுமன்றத்தில் பரபரப்பு..
X

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக எம்பிக்கள் வந்தனர். அப்போது உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்பி வினோத் குமார் சோன்கரின் கார் நாடாளுமன்றத்திற்குள் வந்தது. அப்போது தடுப்பு சுவர் அருகே அந்த காரை பாதுகாப்பு படையினர் ஸ்பைக்ஸ் கருவிகள் மூலம் பஞ்சர் செய்தனர். பாதுகாப்பு கருதி நாடாளுமன்றத்தில் நுழைவாயில் அனைத்திலும் பேரிகேட் தடுப்பு சுவர்கள் இருக்கும். இதில் நவீன சென்சார் கருவிகள் இருக்கும். யாராவது வாகனத்தை கொண்டு இந்த தடுப்பு சுவர்களை மோதினால் ஸ்பைக்ஸ் எனப்படும் முள் கம்பிகள் தரையில் இருந்து மேலே வரும்.

பாஜக எம்பி கார் பஞ்சர்.. துப்பாக்கியுடன் சுற்றி வளைப்பு!! நாடாளுமன்றத்தில் பரபரப்பு..

தடுப்பு சுவர்களை இடித்துவிட்டு வேகமாக செல்லும் வாகனங்களை பஞ்சர் ஆக்கும் விதமாக இந்த இரும்பு கம்பிகள் முற்கள் போல மேலே வருவது வழக்கம். பாதுகாப்பு கருதி இந்த நவீன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக பாஜக எம்பி வினோத் குமார் சோன்கர் நாடாளுமன்றத்திற்கு வந்தார். அப்போது அவரின் கார் கேட் எண் 1 வழியாக உள்ளே நுழைந்தப்போது, வெளியே சென்றுகொண்டிருந்த மற்றொரு கார் தவறுவதாக தடுப்பு சுவர்களில் மோதியது. உடனே அங்கிருந்த ஸ்பைக்ஸ் எல்லாம் மேலே வந்தது.

பாஜக எம்பி கார் பஞ்சர்.. துப்பாக்கியுடன் சுற்றி வளைப்பு!! நாடாளுமன்றத்தில் பரபரப்பு..

இதில் சரியாக பாஜக எம்பி வினோத் குமாரின் கார் சிக்கி மொத்தமாக பஞ்சர் ஆனது. இதனிடையே நாடாளுமன்றத்தில் அனைத்து கேட் பகுதிகளிலும் எமெர்ஜென்சி அலாரம் அடித்ததால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியுடன் சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர். பின்னர் நிலையை உணர்ந்த நிலையில் பாதுகாப்பு படையினர் அதனை சரிசெய்தனர்.

பாஜக எம்பி கார் பஞ்சர்.. துப்பாக்கியுடன் சுற்றி வளைப்பு!! நாடாளுமன்றத்தில் பரபரப்பு..

இதனிடையே தடுப்பு சுவர் மீது மோதிய காரின் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர்.

newstm.in

Tags:
Next Story
Share it