Theme Check

காவல் அதிகாரி தேர்வில் முறைகேடு.. பாஜக பெண் நிர்வாகி அதிரடி கைது !!

காவல் அதிகாரி தேர்வில் முறைகேடு.. பாஜக பெண் நிர்வாகி அதிரடி கைது !!

காவல் அதிகாரி தேர்வில் முறைகேடு.. பாஜக பெண் நிர்வாகி அதிரடி கைது !!
X

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக பாஜக பெண் நிர்வாகி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

கர்நாடகாவில் கடந்த அக்டோ‍பரில் சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான தேர்வு நடைபெற்றது. 545 காலி பணியிடங்களுக்கான தேர்வில் 54 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வில் பெரியளவில் முறைகேடு நடந்ததாக தேர்வு எழுதியவர்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து முறைகேடு புகார் குறித்து சிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

bjp divya arrested

இதற்கிடையில் க‌டந்த வாரம் தேர்வில் 2ஆம் இடம் பிடித்த சேத்தன், 7ஆம் இடம் பிடித்த வீரேஷ், 9ஆம் இடம் பிடித்த பிரவீன்குமார் உட்பட 12 பேர், 10 போலீசார் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் குல்பர்கா மாவட்டத்தில் உள்ள பாஜக பிரமுகர் திவ்யாவுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் முறைகேடு நடந்தது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து போலீசார் திவ்யா, அவரது கணவர் ராஜேஷ் ஆகியோரை தேடி வந்தனர். கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அவர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது அதிருப்தியை உண்டாக்கியது. அந்த வகையில், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பிரியங்க் கார்கே, பாஜக அரசு திவ்யாவை காப்பாற்ற முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

bjp divya arrested

இந்நிலையில் புனேவில் தலைமறைவாக இருந்த திவ்யா, ராஜேஷ் ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பிரியங்க் கார்கே கூறுகையில், சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான தேர்வில் ரூ.80 லட்சம் வரை அமைச்சர், அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுக்கு கமிஷன் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பேற்று கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா பதவி விலக வேண்டும், என்றார்.


newstm.in

Tags:
Next Story
Share it