Theme Check

வெளிச்சத்திற்கு வந்தது பாஜகவின் இரட்டை வேடம்..! - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வெளிச்சத்திற்கு வந்தது பாஜகவின் இரட்டை வேடம்..! - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வெளிச்சத்திற்கு வந்தது பாஜகவின் இரட்டை வேடம்..! - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
X

சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமச்சர், “தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகம் டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் உள்ளதால் டெல்டா ப்ளஸ் வைரஸ் தொடர்பான ஆய்வு மிக விரைவில் இங்கு தொடங்கப்படும்.

‘நீட் விவகாரத்தில் தமிழக அரசின் சட்ட நடவடிக்கைகளுக்குத் துணை நிற்கும்’ என சட்டமன்றத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் வழக்கு தொடர்ந்துள்ளார். இதன் மூலம், பாஜகவின் இரட்டை வேடம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழக அரசால் நியமிக்கப்பட்ட ஏ.கே.விஜயன் குழுவில் தற்போது வரை 86,342 பேர் நீட் தேர்வு தொடர்பான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில், தமிழக அரசுக்கு விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Tags:
Next Story
Share it