“கறுப்பு பூஞ்சை மருந்துக்கு ஜிஎஸ்டி இல்லை..!” - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
“கறுப்பு பூஞ்சை மருந்துக்கு ஜிஎஸ்டி இல்லை..!” - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள், மத்திய, மாநில அரசுகளின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, கொரோனா மற்றும் கறுப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் மருந்துகளின் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கறுப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் ‘ஆம்போடெரிசின்-பி’ மருந்துக்கு ஜிஎஸ்டி இல்லை; அத்துடன், மருத்துவ ஆக்சிஜன், வெண்டிலேட்டர் மாஸ்க், ஆக்சிஜன் செறிவூட்டிகள் மீதான வரியும் 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

