Theme Check

கருப்பு பூஞ்சை மருந்து உற்பத்தி தொடக்கம்- ரூ. 1200 விலை நிர்ணயம்..!

கருப்பு பூஞ்சை மருந்து உற்பத்தி தொடக்கம்- ரூ. 1200 விலை நிர்ணயம்..!

கருப்பு பூஞ்சை மருந்து உற்பத்தி தொடக்கம்- ரூ. 1200 விலை நிர்ணயம்..!
X

மியூகோர்மைகோசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் ஆம்போடெரிசின் பி மருந்து உற்பத்தியை ஜெனிடிக் லைஃப் சையின்ஸ் நிறுவனம் துவங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதித்த நோயாளிகள் பலருக்கும் கருப்பு பூஞ்சை தொற்று, பிறகு வெள்ளை பூஞ்சை தொற்று, இப்போது மஞ்சள் பூஞ்சை தொற்று பரவத் தொடங்கியுள்ளது. அதன்படி இந்த தொற்றுக்கான மருந்து இருப்பை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய சுகாதார அமைச்சகம் இறங்கியுள்ளது.

இந்நிலையில் மஹராஷ்டிராவில் உள்ள ஜெனிடிக் லைஃப் சயின்ஸ் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் ஆம்போடெரிசின் பி மருந்துக்கான உற்பத்தியை தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, முன்னதாக இந்த மருந்தை ஒரேயொரு நிறுவனம் தான் தயாரித்து வந்தது. அதனால் குப்பி ஒன்று ரூ. 7 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. ஆனால் மேலும் இதனுடைய உற்பத்தியை அதிகரித்துள்ளதால் இது ரூ. 1200 விலை பெறும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இதுதொடர்பாக உத்தரவு வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் கருப்பு பூஞ்சை மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் இறக்குமதியின் மூலமாகவும், உள்நாட்டு தயாரிப்பின் மூலமாகவும் ஆம்போடெரிசின்-பி மருந்து இருப்பை அதிகரிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டு இருந்தார்.

கண்ணில் ஏற்படும் கருப்பு பூஞ்சை தோற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம், கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களிடமும் காணப்படுகிறது. சக்கரை அளவை முறையாக பராமரிக்காமல் இருப்பது, உடலில் நீர்சத்து குறைந்து காணப்படுவது உள்ளிட்ட காரணங்களால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகளை நிறுத்துவதன் மூலமும், ஸ்டெராய்டுகளைக் குறைப்பதன் வாயிலாகவும் இந்த நோய் தொற்றை குணப்படுத்தலாம். மேலும் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட சிலருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதும் குறிப்பிடத்தக்கது.



Tags:
Next Story
Share it