பிரதமர் முன்னிலையில் தொகுதி உடன்பாடு? பரபரப்பு தகவல் !!
பிரதமர் முன்னிலையில் தொகுதி உடன்பாடு? பரபரப்பு தகவல் !!

பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி, அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த எந்த கட்சி இடம் பெறும் என்றும், யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இன்று முடிவு செய்யப்பட்ட உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமா் வருவதையொட்டி சென்னையில் 10,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தனி விமானம் மூலம் மீனம்பாக்கம் வரும் பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு வருகை தருகிறார். அங்கிருந்து நேரு உள் விளையாட்டரங்குக்கு வரும் பிரதமர் நிகழ்ச்சி முடிந்த பிறகு கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்படுகிறார்.
பிரதமா் வருகையையொட்டி, சென்னை முழுவதும் போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொது மக்கள் அதிகம் கூடும், ரயில் நிலையங்கள்,பேருந்து நிலையங்கள், மார்க்கெட்டுகள், வழிபாட்டு தலங்களில் காவல்துறையினா் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுமார் 10, 000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதரம் நரேந்திர மோடி,சென்னை வந்தடைந்தார். பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு முக்கியத் திட்டங்களை இன்று சென்னையில் துவக்கி வைத்து, அடிக்கல் நாட்ட உள்ளார்.சென்னையில் மெட்ரோ ரயிலின் அனைத்து வழித்தடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதாவது அனைத்து மெட்ரோ ரயில் வழித்தடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இலவசமாக பயணம் செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.அந்த வகையில், சென்னையின் அனைத்து மெட்ரோ ரயில் வழித்தடங்களிலும் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் இன்று இரவு 11 மணி வரை பயணிகள் இலவசமாகப் பயணம் செய்ய முடியும்.
பிரதமரின் வருகையயொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கனரக, சரக்கு வாகனங்கள் சென்னை எல்லைக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.மாநகர பேருந்துக்கள், மக்களின் வாகனங்கள் செல்லவும் முக்கிய இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதித்து போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த எந்த கட்சி இடம் பெறும் என்றும், யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இன்று முடிவு செய்யப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தாமாக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் இன்று மோடியை சந்திப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக கட்சி, இவர்களது கூட்டணியில் இடம் பெறுமா என தெரியவில்லை. ஒரு வேளை இன்று மோடியை, விஜயகாந்த் சந்தித்தால் தேமுகி அவர்களது கூட்டணியில் இடம் பெறும் வாய்ப்பு உள்ளது.

