Theme Check

சென்டர் மீடியனை தாண்டிப் பறந்த BMW கார்!! VIDEO

சென்டர் மீடியனை தாண்டிப் பறந்த BMW கார்!! VIDEO

சென்டர் மீடியனை தாண்டிப் பறந்த BMW கார்!! VIDEO
X

கர்நாடகா மாநிலம் மங்களூர் அருகே அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ கார் பெண்ணின் மீது மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

பல்லால்பாக் என்ற பகுதியில் வேகமாக வந்த பி.எம்.டபிள்யூ கார் ஒன்று மீடியனை கடந்து எதிர் திசையில் இரு சக்கர வாகனம் மற்றும் மற்றொரு காரின் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த ப்ரீத்தி மனோஜ் என்ற பெண் தூக்கி வீசப்பட்ட படுகாயமடைந்தார். மேலும் எதிர் திசையில் வந்த காரில் இருந்த சிறுவனும் காயமடைந்தார்.

car

இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக படுகாயமடைந்த சிறுவனையும், பெண்ணையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அதிவேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் ஷ்ரவன் குமாருக்கு தர்ம அடி கொடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

அதிவேகமாக வந்த பி.எம்.டபிள்யூ கார் மோதி பெண் தூக்கி வீசப்படும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.


newstm.in

Next Story
Share it