Theme Check

இயக்குநர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு!!

இயக்குநர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு!!

இயக்குநர் சங்க தேர்தல் ஒத்திவைப்பு!!
X

இன்று நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகின்றனர். தலைவர் பதவிக்காக இயக்குனர் பாக்யராஜ் மற்றும் ஆர்கே செல்வமணி இருவரும் இறுதி வேட்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பொதுச் செயலாளர் பதவிக்காக ஆர் பார்த்திபன் மற்றும் ஆர்வி உதயகுமார் இருவரும் இறுதி போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொருளாளர் பதவிக்கு இயக்குனர் பேரரசு மற்றும் வெங்கட் பிரபு இருவரும் இறுதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

direectors 1

துணைத்தலைவர் பதவிக்கு இயக்குனர்கள் ஆர் மாதேஷ் மற்றும் எழில் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இருவருக்குமிடையே போட்டி இல்லாததால் இருவரும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவலை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைதோறும் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்துவதால், தேர்தல் இரண்டு நாள் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி வரும் 25ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று கூறப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து இயக்குனர்கள் சங்க தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it