Theme Check

“உடலும் உள்ளமும் அஞ்சி நடுங்குகிறது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்!!

“உடலும் உள்ளமும் அஞ்சி நடுங்குகிறது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்!!

“உடலும் உள்ளமும் அஞ்சி நடுங்குகிறது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்!!
X

திமுக எம்.பி. என்ஆர். இளங்கோவின் மகன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

என்ஆர். இளங்கோவின் மகன் ராகேஷ் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு தனது நண்பர் வேதவிகாஷீடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அருகே சாலையின் செண்டர் மீடியன் தடுப்பு கட்டையில் கார் மோதியதாக தெரிகிறது.

கீழ்புத்துப்பட்டு மதுவிலக்கு சோதனைச்சாவடி அருகே, கிழக்கு கடற்கரை சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. இதனையடுத்து அருகில் இருப்போர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் ராகேஷின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

dmk

இந்த விபத்தில் ராகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நண்பர் வேதவிகாஷ் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டகுப்பம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடல், பிரேத பரிசோதனைக்குப் பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், முதலமைச்சரும், தி.மு.. தலைவருமான மு..ஸ்டாலின் ராகேஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், கழகத்தின் மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோவின் அன்புமகன் ராகேஷ் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி கேட்டு - மிகுந்த வேதனைக்கும் - சொல்லொணாத் துயரத்திற்கும் உள்ளானேன்.

Stalin 1

ராகேஷ் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கழகக் குடும்பத்தில் ஒருவராக இருந்து பல்வேறு வழக்குகளில் கழகத்திற்காக வாதிட்டு வரும் என்.ஆர்.இளங்கோ அவர்களது சகோதரர் சமீபத்தில் மறைந்த நிலையில், அவரது மகனும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

என்.ஆர்.இளங்கோ எத்தகைய வேதனைக்கு ஆளாகியிருப்பார் என்று நினைத்துப் பார்க்கவே உடலும் உள்ளமும் அஞ்சி நடுங்குகிறது. அன்புக்குரிய மகனை இழந்து வாடும் என்.ஆர். இளங்கோவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

Next Story
Share it