பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸின் சகோதரர் ஏரியில் சடலமாக மீட்பு! திரையுலகினர் அதிர்ச்சி!
தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் என்று இதுவரையில் 50,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனைப் புரிந்திருக்கும் பிரபல பின்னணி பாடகரான கே.ஜே.ஜேசுதாஸுற்கு கே.ஜே.ஜஸ்டின் என்கிற சகோதரர் உள்ளார். இவர் கடந்த இரு தினங்களாக காணவில்லை என்று கூறப்படுகிறது

தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் என்று இதுவரையில் 50,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனைப் புரிந்திருக்கும் பிரபல பின்னணி பாடகரான கே.ஜே.ஜேசுதாஸுற்கு கே.ஜே.ஜஸ்டின் என்கிற சகோதரர் உள்ளார். இவர் கடந்த இரு தினங்களாக காணவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அவரது குடும்பத்தினர் கேரளாவில் உள்ள திரிக்ககர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், ஜஸ்டின் வயதையொத்த ஒருவரது சடலம் ஏரியில் மிதந்துக் கொண்டிருப்பதாக திரிக்ககர போலீசுக்கு தகவல் கிடைத்தது. பின்பு, இறந்தவர் யேசுதாஸின் சகோதரர் தான் என அடையாளம் காணப்பட்டது.
பின்னர், போலீசார் அவரது உடலை எர்ணாகுளத்தில் உள்ள பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ஜஸ்டின் வீட்டிற்கும் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
newstm.in
Tags:
Next Story

