Theme Check

வீதியில் தலை இல்லாமல் கிடந்த இளைஞர் உடல்!! அலறிய மக்கள்.. தலையை தேடும் போலீசார்..

வீதியில் தலை இல்லாமல் கிடந்த இளைஞர் உடல்!! அலறிய மக்கள்.. தலையை தேடும் போலீசார்..

வீதியில் தலை இல்லாமல் கிடந்த இளைஞர் உடல்!! அலறிய மக்கள்.. தலையை தேடும் போலீசார்..
X

மதுரை அவனியாபுரம் அருகே இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை அவனியபுரம் அருகே வைக்கம் பெரியார் நகரில் தலையில்லாமல் சடலம் ஒன்று கிடந்துள்ளது. அதனை கண்ட நாய் குறைத்து கொண்டு இருந்ததை அப்பகுதி மக்கள் வந்து பார்த்தபோது அங்கு இருந்த இளைஞர் உடல் தலை இல்லாத நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இது குறித்து சிலைமான் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சிலைமான் காவல் துறையினர் மற்றும் அவனியாபுரம் காவல்துறையினர் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீதியில் தலை இல்லாமல் கிடந்த இளைஞர் உடல்!! அலறிய மக்கள்.. தலையை தேடும் போலீசார்..முதற்கட்ட விசாரணையில், மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டு கொலை நடந்திருக்கலாம் என கூறுகின்றனர். ஆனால், கொலை செய்து விட்டு தலையை எடுத்து சென்றதால் முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது. தற்போது வரை கொலை செய்யப்பட்ட நபர் யார் என்று அடையாளம் தெரியவில்லை. ஆகவே தொடர்ந்து மதுரை மாநகர் துணை ஆணையர் கார்த்திக் நேரில் வந்து விசாரணை மேற்கொண்ட வருகின்றார். தொடர்ந்து தடவியல் துறை சம்பவ இடத்தை ஆய்வு மேற்கொண்டனர்.
வீதியில் தலை இல்லாமல் கிடந்த இளைஞர் உடல்!! அலறிய மக்கள்.. தலையை தேடும் போலீசார்..
பின்னர் உடலை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கொலை செய்யப்பட்ட இளைஞரின் தலை எங்கே என்று போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அப்பகுதி முழுவதும் தேடி வருகின்றனர். இளைஞனை கொலை செய்து தலையை தூக்கி சென்ற கொடூரமாக நடந்த கொலையால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it