Theme Check

‘புத்தக தாத்தா’ முருகேசன் காலமானார்!!

‘புத்தக தாத்தா’ முருகேசன் காலமானார்!!

‘புத்தக தாத்தா’ முருகேசன் காலமானார்!!
X

'புத்தக தாத்தா' என்று அன்புடன் அழைக்கப்பட்ட முருகேசன் உடல்நலக்குறைவால் காலமானார்.

மதுரையைச் சேர்ந்த முருகேசனை அனைவரும் புத்தக தாத்தா என்றே அன்புடன் அழைப்பார்கள். படிப்பு வாசனையே அறியாத முருகேசனின் உதவியால் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டாக்டர் பட்டம் வாங்கி உள்ளனர்.

இவர் கடந்த 35 ஆண்டுகளாக புத்தகங்களுடன் வாழ்ந்து வந்தவர். 25 ஆயிரம் அரிய புத்தகங்களை சேகரித்து வைத்திருந்த முருகேசனால், எந்தப் புத்தகத்தில் என்ன செய்தி இருக்கிறது என தெளிவாகச் சொல்லமுடியும்.

book thatha 1

இந்தத் தலைப்பில் ஆய்வு செய்கிறேன் என்று மாணவர்கள் சொன்னால் போதும், அது தொடர்பான மொத்த புத்தகங்களையும் கொண்டுவந்து சேர்த்துவிடுவார் முருகேசன் தாத்தா. இதற்கு கட்டணம் ஏதும் பெற மாட்டார்.

மாணவர்களாக விரும்பி பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்வார். தனக்கு தெரியாமலேயே தமிழுக்கு மிகப்பெரிய சேவை செய்து கொண்டிருந்த புத்தக தாத்தா முருகேசன் உடல்நல குறைவால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்காலமானார்.

newstm.in

Next Story
Share it