Theme Check

முன்பதிவு தொடங்கியது.. உடனே முந்துங்கள் !

முன்பதிவு தொடங்கியது.. உடனே முந்துங்கள் !

முன்பதிவு தொடங்கியது.. உடனே முந்துங்கள் !
X

15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான முன்பதிவு இன்று தொடங்கியது.

ஒமைக்ரான் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கும் என பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். மேலும், முன்கள மற்றும் சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி ஜனவரி 10 முதல் தொடங்கும் எனவும், இணை நோயுள்ளவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையை பெற்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

முன்பதிவு தொடங்கியது.. உடனே முந்துங்கள்

இந்நிலையில், இதற்கான முன்பதிவு ஜனவரி 1ஆம் தேதியான இன்று தொடங்கியுள்ளது. மாணவ, மாணவிகள் தங்களது பள்ளி ஐ.டி கார்டை பயன்படுத்தியும் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள முடியும். தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடைய சிறார்கள், ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டையுடன், பள்ளி ஐ.டி கார்டை பயன்படுத்தியும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it