இந்த மாம்பழம் வாங்க முன்பதிவு அவசியம் !! ஒரு மாம்பழத்தின் விலை 1000 ரூபாய் மட்டுமே !!
இந்த மாம்பழம் வாங்க முன்பதிவு அவசியம் !! ஒரு மாம்பழத்தின் விலை 1000 ரூபாய் மட்டுமே !!

பழங்கள் உடலுக்கு எப்போதுமே ஆற்றலையும் சக்தியையும் கொடுப்பவை. எல்லா பழங்களும் எல்லா சீஸன்களிலும் கிடைக்காது. அதனால் சீஸனில் கிடைக்கும் பழங்களைச் சாப்பிட பழக வேண்டும். கோடையில் உண்டாகும் நீர்வறட்சியைத் தணிக்க இயற்கை கொடுத்த கொடை தர்பூசணி, நுங்கு, முலாம் பழம், வெள்ளரிப்பழம், மாம்பழம் போன்றவை. இதில் மாம்பழம் பிடிக்காத குழந்தையை பார்க்க முடியாது.அப்படிப்பட்ட மாம்பழம் விலை எவ்வளவு இருக்கும் ஒரு கிலோ 100 ரூபாய்? அல்லது 200 ரூபாய்? ஆனால் இங்கு விளையும் மாம்பழம் ஒன்று 1000 ரூபாய் என சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? . நீங்க நம்பலனாலும் அது தான் நிஜம் !

மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் "நூர்ஜகான்" என்ற ஒரு அறிய ரக மாம்பழங்கள் விளைவிக்கப்படுகிறது. இந்த அலிராஜ்பூர் மாவட்டம் மத்தியபிரதேசம் குஜராத் மாநில எல்லையில் அமைந்துள்ளது. அந்த மாம்பழம் தான் ஒரு மாம்பழம் 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டை பூர்வீகமாக கொண்டது இந்த நூர்ஜகான் மாம்பழம். இப்பழம் இந்தியாவில் இப்பகுதியில் மட்டுமே விளைகிறது.அதுவே இந்த அதிக விலை விற்பனைக்கு முக்கியமான காரணம்.
ஒரு மாம்பழத்தின் எடை குறைந்தபட்சம் 2 முதல் 3.5 கிலோ இருக்குமாம்.இந்த ரக மாம்பழத்தை அதிகமாக குஜராத்தை சேர்ந்தவர்கள் வாங்க செல்வார்களாம்.இந்த அரியவை மாம்பழங்கள் முன்பதிவு செய்தால் மட்டுமே கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள் விவசாயிகள்.
Meet, the 'Noorjahan' mango 🥭 priced @ Rs.500-1,000 per piece. pic.twitter.com/20omMnSsVZ
— Rahul V (@reesearchmind) June 6, 2021

